search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வமகள் சேமிப்பு திட்டம்"

    • வருகிற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று அறிவித்தது.
    • 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    சென்னை:

    தபால் நிலையங்களில் இயக்கப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. அதுபோல், வருகிற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று அறிவித்தது.

    அதன்படி, பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி, 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    இருப்பினும், பொது சேமநல நிதி (7.1 சதவீதம்), கிசான் விகாஸ் பத்திரம் (7.5 சதவீதம்), தேசிய சேமிப்பு திட்டம் (7.7 சதவீதம்), மாதாந்திர வருவாய் திட்டம் (7.4 சதவீதம்) உள்ளிட்ட இதர சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

    • அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
    • 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆகிறது.

    புதுடெல்லி :

    வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம்வரை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி, வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தின.

    இந்தநிலையில், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.

    வட்டி விகிதம் 0.7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பெண் குழந்தைகள் பெயரில் போடப்படும் 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆகிறது. கடந்த முறை, இதற்கு வட்டி உயர்த்தப்படாதது குறிப்பிடத்தக்கது.

    கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி, 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், 120 மாதங்களுக்கு பதிலாக 115 மாதங்களில் முதிர்வடையும்.

    ஓராண்டு கால டெர்ம் டெபாசிட்டுக்கான வட்டி, 6.6 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், 2 ஆண்டு கால டெபாசிட் வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட் வட்டி 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.4 சதவீதம் ஆகிறது. அதே சமயத்தில், பொது சேமநல நிதி (7.1 சதவீதம்), சேமிப்பு டெபாசிட் (4 சதவீதம்) ஆகியவற்றுக்கு பழைய வட்டி விகிதமே நீடிக்கும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

    • 1000 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க விழாவை மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
    • பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1000 குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தை களுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பெண்களுக்கு சம உரிமை, சொத்தில் சம உரிமை ஆகிய முக்கியத்துவத்தை அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதேபோல அஞ்சல்துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின எதிர்கால நலன் கருதி கொண்டு வரப்பட்டது.

    தற்போது முதல்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதி யில் 1000 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு ெதாடங்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த தொகையை குழந்தைகளுக்கு சேமியுங்கள். அது அவர்களின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். முடியாதவர்களுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி ேபசினர். இதில் இளைஞரணி பெருங்குடி வசந்த், தனக்கன்குளம் அஜித்குமார், மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி ராஜசேகர், கிருத்திகா தங்கபாண்டி, திருமங்கலம் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஜாய்ஸ், அஞ்சலக அதிகாரி முனிகணேஷ், காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.

    பெண் குழந்தைகளுக்காக பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகம்,வங்கிகளில் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை குறைக்கப்பட்டுள்ளது. #PostOffice #SSY
    புதுடெல்லி:

    பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்காக, பெற்றோர்கள் பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகம், வங்கிகளில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழ்நாட்டின் அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டமாக செயல்பட்டு வருகிறது. 

    2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை, இந்த திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். தொடக்கத்தில் சேமிக்கும் பணத்துக்கு 9.1 சதவிகித வட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக வட்டி குறைக்கப்பட்டு தற்போது 8.1 சதவிகித வட்டி அமலில் உள்ளது. 

    இந்தக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்ச தவணைத்தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதிக பட்சமாக ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். 

    இந்நிலையில், செல்வமகள் திட்டத்தின் குறைந்தபட்ச ஆண்டு டெபாசிட் தொகை, ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்பட்டதால், பலர் அதிருப்தி அடைந்த நிலையில் அவர்களை சரிகட்ட மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ×